நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.

0

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய குறித்த சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது அரசியல், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவமிக்க விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு இந்திய மத்திய அரசின் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் உயர் ஸ்தானிகர் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply