18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்குமாறு அமெரிக்க அதிகாரிகளிடம் பைசர் பயோடெக் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய குறித்த விடயம் தொடர்பான கோரிக்கை அமெரிக்க மருத்துவ கட்டுப்பாடாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுமார் 10,000 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூன்றாவது தடுப்பூசி 95.6 சதவீத நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் குறித்த நிறுவனம் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளது.
மேலும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கும் அவசரகால பயன்பாட்டுக்காக மூன்றாவது தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா கடந்த செப்டம்பர் மாதம் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



