தமிழகத்தில் பள்ளிகளுக்கு விசேட விடுமுறை!

0

தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.

இதற்கமைய அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அதிகாலை வட தமிழக கடலோர பகுதிகளில் இருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கள்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கனமழை எதிரொலியால் தமிழகத்தின் மேலும் 20 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுரை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கரூர், தேனி, விழுப்புரம், விருதுநகர், திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், புதுக்கோட்டை, நாமக்கல், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பூர், ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply