பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தீபாவளி வாழ்த்து.

0

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தமது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில் தித்திக்கும் தீபாவளித் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் தீமை விலகி நன்மையும் , இருள் விலகி ஒளி பிறக்கும் பண்டிகை தீபாவளிப் பண்டிகையாகும், ஆகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பண்டிகையை தூய்மையாக மற்றும் பாதுகாப்பான முறையில் கொண்டாடி சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்கெடுப்பதாக உறுதி எடுப்போம் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .

அவ்வாறு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள், இந்த தீபத்திருநாள் தீபத்திருவிழா மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் தர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

அத்துடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்திகல் தீப ஒளி பாகுபாடின்றி அனைவரையும் ஒளிரச் செய்கிறது இதுவே தீபாவளி செய்தி. உங்கள் அன்புக்குரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடுபவராக இருங்கள்.

மேலும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply