திருகோணமலையில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கானது
முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் அனுசரணையுடனும் மற்றும் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் அவர்களது தலைமையிலும் நேற்று(02) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும் தி/ குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்திலும், நண்பகல் 1.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தி/ ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயத்திலும் நடைபெற்றது.
அத்துடன் சாதகமான கற்றல் சூழலை உருவாக்குவதன் மூலம் மாணவர்களைப் பொதுப்பரீட்சைக்குத் தயார்படுத்துவதற்காக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



