தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று இரவு 12 லட்சம் அகல் விளக்குகளால் அயோத்தியை அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
14 ஆண்டுகள் வனவாசம் மற்றும் ராவணனை தோற்கடித்த பிறகு அயோத்திக்கு திரும்பும் ராமர் சீதையை வரவேற்கும் வகையில் அங்கு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில் அயோத்தியில் சரயு ஆற்றங்கரையில் உள்ள படித்துறைகளில் 9 லட்சம் விளக்குகளும் நகரின் மற்ற இடங்களில் 3 லட்சம் விளக்குகளும் ஏற்றப்படவுள்ளன.
இதன் மூலம் புதிய சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது .
மேலும் நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சி, ராமாயண கதைகளை விளக்கும் அலங்கார ஊர்திகள் ஊர்வலம் , ராமலீலா , லேசர் ஷோ ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



