இலங்கையின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கன மழை.

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேல், தென் மற்றும் வட மாகாணங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் மேல்,சப்ரகமுக, வடமேல் , மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பொது மக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply