இலங்கையின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய கன மழை.

0

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு பூராகவும் மேகமூட்டமான வானிலையில் நிலவும்.

அத்துடன் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும்.

அத்துடன் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply