திருகோணமலையில் இடம்பெற்ற போராட்டம்.

0

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது பல பதாகைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.

இலங்கை மின்சார சபையின் ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டணியே இக் கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

நாட்டின் தேசிய வளங்களை விற்பனை
செய்வதினை உடனடியாக நிறுத்து, பங்குகளை விற்பதை உடன் நிறுத்து, அமெரிக்காவிற்கான LNG விலை மனு நடை முறையினைஅரசு மீறுகிறது,மோசடி ஒப்பந்தத்தினை உடனடியாக திரும்பப் பெறு உள்ளிட்ட பல்வேறு சொற்கள் அடங்கிய பதாகைகளை இதன் போது ஏந்தி ஊழியர்கள் எதிர்ப்பினை வெளியிட்டார்கள். இதில் பெரும்பாலான ஊழியர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply