இன்று கொவிட் தடுப்பு விசேட குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய குறித்த குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது.
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாட்டை எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்குவதற்கு இதற்குமுன் நடைபெற்ற கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்பு பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் பய ணங்கள் தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் குறிப்பிட்டுள்ளார்.



