2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழி.

0

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு இன்று (26) மாலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை யதார்த்த பூர்வமாக்கும் நோக்கில் பல விடயங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. நிதியமைச்சர் அவர்கள் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான நிதி உதவி உட்பட ஏனைய உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அதன் ஒரு அங்கமாக இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன்தர்சன பாண்டிகோராள , கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மாகாண அமைச்சர் ஆரியவதி கலபதி, தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி , அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், கிராம முன்னேற்றச் சங்கம் மற்றும் ஏனைய சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply