எல்லவல நீர்வீழ்ச்சிக்கு
மறு அறிவித்தல் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த தந்தையும் அவரது இரண்டு பிள்ளைகளும் குறித்த நீர் வீழ்ச்சிக்கு சென்று இருந்த
நிலையில் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் குறித்த நீர்வீழ்ச்சியில் இதுவரையில் 6 பேர் நீராட சென்று உயிரிழந்துள்ளனர்.
இந்த விடயத்தை கருதிற் கொண்டே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் எல் எல்லவல நீர் வீழ்ச்சியை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்குவதாக எல்லவல பிரதேச செயலாளர் சந்தன அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.



