திருகோணமலைக் கல்விவலயத்தில் பாடசாலை மாணவர்களின் வருகை தொடர்பில் வெளியான தகவல்.

0

கொரோனா அச்சுறுதல் காரணமாக நாடளாவிய ரீதியில் மூடப்பட்டிருந்த ஆரம்பப் பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகள் திங்கட்கிழமை (25) சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மீளத்திறக்கப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (26) திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலைக் கல்வி வலயத்தின் கீழ் 74 தமிழ், சிங்கள மொழி மூல ஆரம்பப்பிரிவுப் பாடசாலைகள் (திருகோணமலைக் கோட்டம்-40, குச்சவெளிக் கோட்டம்-27, தம்பலகாமம் கோட்டம்-07) பாடசாலைகளில் மாணவர்களின் வரவு இன்று அதிகரித்து காணப்பட்டது.

ஆரம்பப்பிரிவுப் பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதுடன், மாணவர்களை கற்றலில் ஆர்வமூட்டவும் மற்றும் அவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவதனூடாக இழந்த கல்வியை மீட்டெடுப்பதற்காகவும் பல இணைப்பாடவிதான செயற்பாடுகள் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் அவர்களது வழிகாட்டலின் கீழ் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply