வாழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் கீழ் மற்றொரு நிரந்தர வீடு வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் நேற்று (25)குச்சவெளிப் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டு அவை பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
வன்னி ஹோப் நிறுவனமும் மக்கள் சேவை மன்றமும் இணைந்து ஓலைக் குடிசை மற்றும் தகரக் கொட்டில்களில் நீண்டகாலமாக பெரும் அசெளகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் குடும்பங்களின் வறுமை நிலமைககை் கருத்திற் கொண்டு அவர்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து வழங்கி வருகின்றது. இந்த உதவித் திட்டத்தின் கீழ் மேற்படி வீடு நிர்மாணித்து குறித்த பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.
சுமாா் மூன்று இலட்சம் பெறுமதி கொண்ட இந்த வீட்டின் நிர்மாணிப்பு பணிக்காக அவுஸ்ரேலியா- சிட்டியினில் வசிக்கின்ற திரு. நாராயணநசுவாமி அவர்களினால் அவரது மனைவி காலங்சென்ற திருமதி. சிவசாந்தி நாராயணசுவாமி அவர்களின் ஞாபகார்த்தமாக அன்புளிப்புச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



