மட்டக்களப்பு வைத்தியசாலையில்
இயங்கி வந்த சிற்றுண்டி சாலைக்கு சீல் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற உத்தரவுகமைய குறித்த சிற்றுண்டி சாலை சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்றுண்டி சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய உணவு பொட்டலத்தில் பல்லி ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகருக்கு குறித்த விடயம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து இவ்வாறு இயங்கி வந்த சிற்றுண்டிச் சாலைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இதனை ஆராய்ந்த நீதிபதி குறித்த சிற்றூண்டி சாலையினை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு விடுத்துள்ளார்.
இதனடிப்படையில் குறித்த சிற்றுண்டிச்சாலை சுகாதார பரிசோதகர்களினால் சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



