பண்டிகை காலங்கள் நெருங்கி வருகிறது – அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

0

கொவிட் தொற்றுடன் மலேரியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை
வடக்கு வங்காளத்தில் அதிகரித்து வருகின்றது.

இதற்கமைய கொவிட் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கட்டாயம் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு காளி பூஜை, தீபாவளி, சத் பூஜை மற்றும் ஜகதாத்திரி பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வரை இருப்பதனால் கொவிட் தொற்றின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

இந்நிலையில் குறித்த தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற கட்டாயம் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

மூக்கு மற்றும் வாயை முழுமையாக மூடும் படி முக கவசம் அணிவது உறுதி செய்ய வேண்டும்.

மேலும் முகக்கவசம் தவிர ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply