சமூக வலைத்தளத்தில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த புதிய சட்டம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கமைய நாடாளுமன்றில்
விரைவில் சமூக வலைத்தளத்தில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தை சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த விடயத்தை நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார் .
அத்துடன் அமைச்சரவை பத்திரம் ஒன்றும் இதற்காக முன்வைக்கப்படவுள்ளது.
மேலும் குறித்த சட்டத்தின் ஊடாக சமூக வலைத்தளங்களில் தரவும் போலியான தகவல்களை கட்டுப்படுத்தப்படுமே தவிர மக்களின் உரிமைகள் மீறப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



