வெளிநாடு செல்பவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

0

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.

இதற்கமைய தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாட்டுக்கு செல்பவர்கள் இடைத்தரகர்கள் உடன் சிக்காமல் தங்களது செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான நேரடி அணுகல்களை அதன் கட்டுப்பாட்டின் கீழ் உரிமம் பெற்ற தரப்பினரிடம் இருந்து மட்டுமே பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறாக உரிமம் பெற்ற 800 முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஏதேனும் சிக்கல் நிலை ஏற்படுமாயின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவலை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply