தமிழகத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தேவையில்லை- டாக்டர் சமிரன் பாண்டா.

0

தமிழகத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தேவையில்லை என டாக்டர் சமிரன் பாண்டா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் கொவிட் 2 ஆவது அலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் முழுமூச்சுடன் போராடி வருகின்றன.

குறித்த வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்நிலையில் 18 வயதான அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது.

அத்துடன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி இன்னும் தொடங்கவில்லை..

மேலும் குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி போடலாம் என இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரக வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்றுநோய்கள் துறை தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்து அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply