தங்களுக்கு உரிய இரசாயன உரத்தை பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை.

0

தங்களுக்கு இரசாயன பசளையே வேண்டும் சேதனப் பசளையால் விவசாய செய்கை அறுவடையை பெற முடியாது எங்களது வயிற்றில் அடிக்காதீர்கள் என தம்பலகாமம்_சம்மாந்துறை வெளி விவசாய சம்மேளன உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

தம்பலகாமம் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்தும் தெரிவிக்கையில் சேதன உரம் காரணமாக கலை நாசினி புல்வகைகளை முளைக்கின்றன விளைச்சல் குறைவாக உள்ளது .

சேதனை பசளை தயாரிப்பு தொடர்பில் எவ்வித அறிவும் எமக்கின்மை இதனால் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம்.

இந்த அரசாங்கம் ஆளுக்கொரு கதையை சொல்கிறார்கள் பிரதமர் ஒரு கதை ஜனாதிபதி விவசாய அமைச்சர் என ஆளுக்கொரு கதையை கூறி வருகின்றனர்.

எங்களது தம்பலகாமம் பிரதேசம் ஊடாக 2000 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை பண்ணப்பட்டு வருகிறது .ஆனால் இம் முறை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது தங்களது வாழ்வாதாரமே வேளாண்மையில் தான் தங்கியுள்ளது .குடும்பங்களும் இதை நம்பியே வாழ்கிறது.

எது எப்படியோ தங்களுக்கு இரசாயன உரத்தை பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றனர்.

Leave a Reply