சென்னையில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படு வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள், கட்டுமான கழிவுகளை பொது இடங்களிலும் , சாலைகளிலும் கொட்டுபவர்களின் மீதும், நீர்நிலைகளை மற்றும் நீர் வழித்தடங்களில் குப்பைகளை எறிபவர்கள் மீதும் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதற்கமைய கடந்த 11ம் திகதி முதல் 13ஆம் திகதி வரையிலான மூன்று நாட்களில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 507 பேரிடமிருந்து 3 லட்சத்து 19 ஆயிரத்து 200 அபராதமும் ,
அவ்வாறு பொதுவிடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய 123 பேரிடம் இருந்து 3 லட்சத்து 24 ஆயிரத்து 300 அபராதமும் என மொத்தமாக 6 லட்சத்து 43 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



