தேசிய விவசாயக் கொள்கை ஒன்றை முன்வைக்க நடவடிக்கை-சஜித் பிரேமதாஸ.

0

தேசிய விவசாயக் கொள்கை ஒன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுள்ளது.

இதற்கமைய அம்பலாங்கொடை பகுதியில் இன்று இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்ட போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் சரியான விவசாயக் கொள்கை ஒன்றை ஏற்படுத்துவதன் ஊடாகவே விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினை காணமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவசாய துறைக்கான உரத் தட்டுப்பாடு காரணமாக இன்றும் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply