அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய தகவல்.

0

கல்வித்துறையில் பாரிய மறுசீரமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் பட்டப் படிப்பினை நிறைவு செய்யும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதால் மருத்துவத்துறை மாணவர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

இதன் பிரகாரம் இதில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணையத்தில் குறித்த விடயம் தொடர்பான பரிந்துரைகள் பொதுமக்கள் கருத்துகளுக்காக பதிவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply