திருகோணமலையில் மோர ஓயாவினூடாக பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம்.

0

திருகோணமலை மாவட்டத்தின் பதவிசிறீபுர பிரதேச செயலகப் பிரிவின் காவன்திஸ்ஸபுர ஹெலம்பவெவ ஆகிய இரு பிரதேசங்களை இணைக்கும் வகையில் மோர ஓயாவினூடாக பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் ஆகிய கபில நுவன் அத்துகோராள தலைமையில் நடைபெற்றது.

இதற்காக 43 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. நீண்டகாலமாக மக்கள் எதிர்நோக்கி வருகின்ற போக்குவரத்து பிரச்சனைக்கு இதன் மூலம் தீர்வு காணப்படும். இதற்கு முன்னர் இப்பிரதேசத்தில் இப்பாலம் இன்மை காரணமாக மக்கள் தங்களுடைய ஜீவனோபாய மற்றும் போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றுவதில் பாரிய சிரமங்களை முகங்கொடுத்தனர்.

தற்போதைய அரசாங்கம் கொவிட்டிற்கு மத்தியிலும் இப்பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தமை குறித்து பிரதேசவாசிகள் அரசாங்கத்தை தங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள , பிரதேச அரசியல் தலைமைகள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply