மக்கள் மீது பாரத்தை சுமத்த வேண்டாம்!

0

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது இந்தவிடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்நிலையில் சந்தையில் எரிவாயு பால் மற்றும் கோதுமை மா போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணத்தில் எரிபொருள் விலையை அதிகரிப்பதனால் நுகர்வோர் பொருளாதார ரீதியாக பாதிப்படைவார்கள் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ” தற்போது எரிபொருளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது ” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறும் மக்கள் மீது பாரத்தை சுமத்தாமல் அரசங்கமே அதனை பொறுப்பேற்று செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த கூட்டத்தின் போது உர நெருக்கடி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும் பாடசாலைகளில் ஆரம்பிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply