ஆசிரியர்கள் சம்பளம் அதிகரிப்பு கேட்கவில்லை அவர்கள் பொருந்தியதை தாருங்கள் என்றே கேட்கின்றனர்.

0

ஆசிரியர்கள் சம்பளம் அதிகரிப்பு கேட்கவில்லை அவர்கள் பொருந்தியதை தாருங்கள் என்றே கேட்கின்றனர் இவை சாதாரனமே. என தேசிய விடுதலை மக்கள் முண்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று (09)வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.


1994ம் ஆண்டு  முதல் அதிபர் ஆசிரியர்களின் சங்கம் தொடர்ச்சியான சம்பள முரண்பாட்டு போராட்டத்தின் விளைவாக அதிபர் சேவை 1,2,3 மற்றும் ஆசிரியர் சேவை தரம் 2-Iமற்றும் 2-II இருந்தோர் சமாந்தர சம்பளத்தை பெற்றனர்.


 இருந்தும் 1979 இல்  பெரேரா சம்பள ஆணைக்குழு நிறுவியதன் பின் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்ட முறைமையை ஏற்றுகொள்ளாததே இந்த அதிபர் ஆசிரியர் வேலை நிறுத்த ஆட்பாட்டங்களுக்கு காரணமா இருந்து வருகிறது. இந்த விடயத்தை கடந்த நல்லாட்சியாளர்களும் இவர்களின் கோரிக்கைகளை புறம் தள்ளியது.


இதை தற்போதைய அரசாங்கம் கட்டாயம் கவனத்தில் கொண்டு நாட்டின் பாடசாலை மாணவர்களின் கல்வி விடயத்தில் கவனம் செலுத்தி இவர்களின் கோரிக்கைகளை கட்டம் கட்டமாகவாவது சரிசெய்து அதற்கான ஆதாரமாக  வர்த்தமானி  மூலமாக வெளியிடவேண்டும். 
அல்லது இந்த வேலை நிறுத்த போராட்டம் நாட்டின் கல்வி வளர்ச்சியை முற்றாக பாதிப்பதுடன் சாதாரண மட்டத்தில் இருக்கும் மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை..

Leave a Reply