தமிழகத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களுடன் பெறோர்களும் சேர்ந்து இருப்பதற்கு அனுமதி.

0

தமிழகத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களுடன் பெறோர்களும் சேர்ந்து இருப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொவிட் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் நிலையில் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

எதிர்வரும் முதலாம் திகதி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் முதல்முறையாக முதலாம் வகுப்பிற்கு வர மாணவ மாணவிகளுக்கு எப்படி முகக் கவசம் அணிவது என்பது கூட தெரியாத நிலை இருக்கும்.

இதன் பிரகாரம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து உடன் இருக்கலாம்.

குழந்தைகளால் மாஸ்க் போட்டுக் கொண்டு நீண்ட நேரம் உட்கார முடியவில்லை என்ற நிலை வருக்கிறதோ, அப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply