ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இரசாயன உர விற்பனை மற்றும் பாவனையை தடை செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கிய யோசனையை செல்லுபடியற்றதாக கோரி ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
இன்று முற்பகல் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைவர் ஹேம குமார நாணயக்கார மற்றும் அதன் செயலாளர் பீ. ஹெரிசன் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



