நவராத்திரி விழாவின் சிறப்பு…!!

0

இந்துக்கள் கடைப்பிடிக்கும் சைவ விழாக்கள் விரதங்களுள் நவராத்திரி விரதமுமொன்றாகும்

இது வீரம், செல்வம், ஞானம் வேண்டி முப் பெரும் சக்திகளான துர்க்கை, லக்சுமி, சரஸ்வதி தேவியரை போற்றி புகழ்ந்து அனுஸ்டிக்கும் சக்திவிரதமாகும்.

இது இவ்வருடம் புரட்டாதி 21 ல் பூர்வபட்சம் வளர்பிரை பிரதமைத் திதியில் அமாவாசை தொடர்பற்ற ஆஸ்வீஜ சுத்தமுள்ள 07-10-2021 வியாழக்கிழமை ஆரம்பமாகிறது.

அத்துடன் மனித வாழ்க்கைக்கு அவசியம் தேவைப்படும் இந்த மூன்று (வீரம்,செல்வம்,கல்வி) பேறுகளையும் பெற்று வையத்தில் வாழவேண்டு மென்று காலங்காலமாக ஆசார சீலமுடன் தமிழின மக்கள் நவராத்திரி விரத நாளை விழாவெடுத்து கொண்டாடி வருவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடமும் நவராத்திரிக்கும்ப நிகழ்வுகள் இந்து ஆலயங்களிலும், விசேடமாக அம்மன் ஆலயங்களிலும் கும்பஆவாகனத்துடன் விரத அனுஸ்டானமும் பூசையும் நடைபெறும்.
விஜய தசமியுடன் பத்து நாள் இடம் பெறும் நவராத்திரி விரதம் இவ் வருடம் ஒன்பதாவது நாளன்று விஜயதசமி கன்னி வாழை (ஸமிவிருட்ச பூசையுடன்) வெட்டி கும்பந் தூக்கும் சொரிதலுடன் நிறைவுக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் சரஸ்வதி பூசை மூலநட்சத்திரம் வரும் 12-10-2021 செவ்வாய்க்கிழமை முதல் திருவோண நட்சத்திரம் வரும் 14-10-2021 வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறவேண்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மகா நவமி உபவாசம் 14-10-2021 வியாழக்கிழமை முன்னிரவு 10.28 வரையாகும் அன்றைய தினமே சரஸ்வதி பூசை மூன்றாம் நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின் தசமி இது விஜய தசமி என விசேடமாக கொள்ளப்படும்.

15-10-2021 வெள்ளிக்கிழமை விஜயதசமியில் கல்விசெயற்பாடுகள், கலை, வீரவிளையாட்டுக்களை ஆரம்பிக்க ஏற்ற சுப நேரம் காலை 06- 02 முதல் 07-32 வரை. இதே தினம் கேதார கெளரி விரதக்காப்பு விரதமும் ஆரம்பம் இது 21 நாட்கள் கொண்ட சிவ விரதமென்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply