10 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இரு நபர்கள் அதிரடிக் கைது!

0

10 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு நபர்கள் காவற்துறையினரால் அதிரடியாகக் கைதுசெய்யப்ப்டுள்ளனர்

மன்னார் – முருங்கன் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் 30,42 வயதினை உடைய வவுனியா பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரளும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply