இலங்கையில் ஊரடங்குச் சட்டம் தளர்வு!

0

நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதன் அடிப்படையில் கடந்த 41 நாட்களாக நாடு பூராகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதற்கமைய இன்று அதிகாலை 4 மணியுடன் குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனிப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தற்போது நீக்கப்பட்டாலும் கூட மாகாணங்களுக்கிடையே விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் நேற்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டது .

இதன் அடிப்படையில் பொதுமக்கள் தனது தேவைகளை முன்னெடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply