அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்!

0

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொவிட் தொற்றின் தாக்கம் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணத்தால் பாடசாலைகளை முழுமையாக திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது தரம் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரையான பள்ளிகள் மாத்திரமே திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அக்டோபர் 31ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டிருந்தாலும் மேலும் சில தளர்வுகள் அளித்தல் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது

இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை எப்போது திறப்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்றையதினம் ஆலோசனை நடத்தியுள்ளார்..

இதன் பொது கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண் 552, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 11-9-2021-ன்படி, 31-10-2021 காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சமுதாயம், அரசியல், கலாசார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

மேலும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

Leave a Reply