பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க நடவடிக்கை!

0

கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் மாதம் குறித்த பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசியை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படுமாயின் பல்கலைக்கழகத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் மீளத் திறக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply