முழு நாட்டையும் உலுக்கி போடும் அளவிற்கு முக்கிய கருத்தொன்றை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடபோகின்றேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சமூக வலைத்தள ஊடகம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் குறித்த விடயத்தினை குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் தற்போது முஸ்லிம் உறுப்பினர்கள் அமைப்புகள் என பலரும் தனக்கு எதிராக முறையிட்டு வருவதாகவும், அந்த செயற்பாடுகள் முடித்த பின் தாம் மேற்படி தகவல்களை வெளியிட உள்ளதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.



