5 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை!

0

இலங்கையில் தற்போது நிலவும் அசாதாரண வானிலை காரணத்தினால் நாட்டின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலி, மாத்தறை , நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காலி மாவட்டத்தின் எம்பிலிபிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின் அங்குரஸ்ஸ, கொடபல பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் ருவான்வெல்ல மற்றும் எட்டியாந்தோட்டை பிரதேசங்களுக்கும், நுவரெலிய மாவட்டத்தின் அம்பகமுவ காரேலே, இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, களவான எஹலியகோட, இரத்தினபுரி நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply