ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய பணிப்புரை!

0

நாட்டை மீள திறப்பதற்கு உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஒக்டோபர் முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்குரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து தரப்பினருக்கும் பணிப்புரை முன்வைத்தார்.

இதற்கமைய குறித்த பரிந்துரைகளை சுகாதாரம், போக்குவரத்து மற்றும் ஏனைய பிரிவுகளினால் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டவுள்ளது.

மேலும் அதனை நீடிக்காமல் இருக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நாடு மீண்டும் திறக்கப்பட்டாலும் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply