அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படுமா?

0

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை அதிகரித்து வருகின்றது.

இதற்கமைய பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலையை அதிகரிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் ஆலோசனை நுகர்வோர் அதிகார சபையினால் அண்மையில் கூடிய வாழ்க்கை செலவு குழுவிடம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், ஒரு சில உதயம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவாலும் , சீமெந்து ஒரு மூட்டை இந்நிலையை 50 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது.

அவ்வாறு சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த விடயம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply