கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மஹமார் மஜீத் நகர் வீதி முறையாக அபிவிருத்தி செய்யவில்லை.

0

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மஹமார் மஜீத் நகர் வரையான வீதியானது அபிவிருத்திக்காக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அது முறையாக மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 8 கிலோ மீற்றர் தூரம் வரையான இவ் வீதியை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது தற்போது இது கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளதால் மழையுடன் கூடிய கால நிலையால் இவ் வீதி ஊடாக பயணிக்க முடியாத பல இன்னல்களை சந்திப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு கட்டார் வீட்டுத் திட்டம் வரையான தோண்டப்பட்ட குழிக்குள் நீர் நிரம்பி காணப்படுவதால் பயணிக்க முடியாத நிலை உள்ளது நாளாந்தம் நூற்றுக்கும் அதிகமான மக்கள் இவ் வீதியை பயன்படுத்தியே போக்குவரத்து செய்கின்றனர்.

விவசாயம் கால் நடை வளர்ப்போர் உட்பட இவ் வீதியை கடந்தே பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ள வேண்டியுள்ளது.

இவ் வீதியை கொந்தராத்து பெற்று செய்யும் தனியார் நிறுவனம் திறம்பட விரைவில் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மந்த கதியில் இடம் பெறும் இவ்வகையான வீதியை உரிய தரப்பினர் திறம்பட செய்து தருமாறும் விரைவாக உறுதியாகவும் செய்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply