தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு கன மழை!

0

தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணத்தினால் இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ,திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய கடலோரங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

23.09.2021 – கடலூர்,விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

24.09.2021- விழுப்புரம் , திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் செய்யும்.

25.09.2021- கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை அண்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

26.09.2021- தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யும்.

மேலும் சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்குள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply