ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபயவின் சிறப்பு உரை!

0

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது கூட்டம் நேற்றைய தினம் நிவ்யோர்க்கில் ஆரம்பமானது.

இதற்கமைய குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று உரையாற்றவுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவதே இதுவே முதலாவது சந்தர்ப்பம் ஆகும்.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை நேரப்படி இரவு 8:30 மணிக்கு உரையாற்றவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாளைய தினம் நடைபெறவுள்ள உணவு கூட்டத் தொடரிலும், நாளை மறுதினம் இடம்பெறவுள்ள எரிசக்தி தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தனது கருத்துக்களை முன்வைக்களவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply