வீதியில் கொட்டப்பட்ட கிரவல்களினால் போக்குவரத்து பாதிப்பு மக்கள் கவலை !

0

கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட காக்காமுனை வட்டாரம் 06 பகுதியில் வீதி அபிவிருத்தி என்ற பேரில் கொட்டப்பட்ட கிரவல்களினால் போக்குவரத்து தடைப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியில் கொட்டப்பட்ட கிரவல் குமியல்கள் ஒரு கிழமையையும் தாண்டியுள்ளது

இதனை செப்பனிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் அதன் ஊடாக போக்குவரத்து செய்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் அதன் ஊடாக பயணிப்போர் சுட்டிக் காட்டுகின்றனர்.

காக்காமுனை ஆறாம் வட்டார பிரதான பள்ளிவாயல் வீதி மற்றும் அதனை அண்டிய உள் ஒழுங்கை வீதிகளிலேயே இவ்வாறு கிரவல் குமியல் கொட்டப்பட்டுள்ளது ஒரு கிழமைக்கும் அதிகமாக நாட்கள் கடப்பதனால் இப் பகுதி ஊடான நடமாடும் வியாபாரிகள் அவ்வீதியை விட்டு மாற்று வீதிக்கு செல்வதனால் தேவைகள் அற்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் கட்டிட வேலைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டு சேர்க்க முடியாமை என பல இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.

எனவே உரிய கொந்தராத்துக்காரர் மற்றும் அரச அதிகாரிகள் கவனம் செலுத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply