தமிழகத்தில் அரச சுவர்கள் மற்றும் பொது இடங்களில் போஸ்டர்கள் ஓட்டுவதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது.
குறித்த செயற்பாட்டினை மீறி போஸ்டர் ஒட்டியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் சென்னை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அகற்றி விட்டு அங்கு வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
அவ்வாறு மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு பகுதியிலும் எங்கெங்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன? என்பதை கண்காணித்து வருகின்றனர்.
இதுவரையில் சென்னையில் மொத்தமாக 57 ஆயிரத்து 374 இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அவற்றுள் 1 லட்சத்து 57 ஆயிரத்து 527 போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



