தமிழகத்தில் புதிய ஆளுநர் நியமனம்!

0

தமிழக ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் பிரகாரம் தமிழக ஆளுநராக ஆர். என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய ஆளுநர் பதவியேற்பு விழா கவர்னர் மண்டபத்திற்கு அருகே உள்ள திறந்தவெளிப் புல் வெளி அரங்கில் நடைபெற்றது.

அத்துடன் தமிழகத்தின் 15ஆவது ஆளுநராக ஆர். என். ரவி இன்று காலை பதவியேற்றார் என்பதுடன் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் குறித்த நிகழ்வில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்பிகள் என பல அதிகாரிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply