ஒரு தொகை கழிவு தேயிலையுடன் இருவர் அதிரடியாக கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய மக்கள் பாவனைக்கு உதவாத ஒரு தொகை கழிவு தேயிலையை பாரவூர்தி ஒன்றில் கொண்டு சென்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்ப்டுள்ளனர்,
இதற்கமைய கோனஹேன விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் தேயிலையுடன் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்கள் அந்த தேயிலையை அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 28, மற்றும் 48 வயதினையுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



