பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக பிரபலமான நடிகை தான் யாஷிகா ஆனந்த்.
இவர் சில மாதங்களுக்கு முன் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரியில் பார்ட்டி முடித்து விட்டு வீடு திரும்பும்போது மகாலி புறம் அருகே கார் விபத்துக்குள்ளாகி அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் யாஷிகா விற்கும் அவரது நண்பர்களும் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கை,கால் , முதுகு, முறிவுக்கு பின் தற்போது சரியாக இருந்தாலும் சில நாட்கள் நடக்க முடியாது என்று யாஷிகா கூறி வந்தார்.
அவ்வாறு இளம் நடிகை யாஷிகா தான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற புகைப்படத்தையும் அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார்.
மேலும் அவரது தோழி பவானியின் இறப்பை தாங்க முடியாமல் இருந்து வருகின்றார்.
அவருடன் கடைசியாக எடுத்த புகைப்படம் ஒன்றையும் மனமுருக்கதுடன் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



