கிண்ணியா தள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு(HDU) மற்றும் ஏனைய மருத்துவு பிரிவுகள் ஆரம்பித்து வைப்பு.

0

கிண்ணியா தள வைத்தியசாலையில் குறைபாடாக காணப்பட்ட விசேட கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவு மற்றும் ஏனைய பிரிவுகள் நேற்று வைத்தியசாலை வளாகத்தில் வைத்து திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின் எம்.எஸ். தெளபீக் அவர்களின் முயற்சியினாலும் வைத்தியசாலையின் முன்னால் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எம்.எம். ஜிப்ரி அவர்களுடைய ஒத்துழைப்புடனும் இப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இப்பிரிவுகளை நிறுவுவதற்கு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை 80 இலட்சம் ரூபா நிதியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இதற்கு தேவையான சுமார் ருபாய் 20 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் கட்டில்களை சுகாதார அமைச்சினூடாக பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகான சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் , திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. டீ.ஜீ.எம்.கொஸ்தா, கிண்ணியா தளவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. ஜவாஹீர்(MS), மற்றும் வைத்தியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் எனைய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply