அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி பிரமாணம்!

0

அஜித் நிவாட் கப்ரால் இன்றுமத்திய வங்கியின் ஆளுநராக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்,

மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

இதற்கமைய குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் முன்னாள் ஆளுனர் டபிள்யு. டி லக்ஷ்மன் நேற்றைய தினம் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட அஜித் நிவாட் கப்ரால் இன்று தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply