தலவத்துகொட பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்றில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த சுற்றிவளைப்பில் 2 பெண்கள் உட்பட மூவர்
காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த சுற்றிவளைப்பு தம்பலகாமம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் சீதுவ மற்றும் தங்காலை பகுதியைச் சேர்ந்த 46,39 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த படவுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



