வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைப்பதனால் ஆபத்தான நிலை உருவாகும்!

0

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைப்பதனால் நாடு மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்குவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய கடந்த சில தினங்களாக அதிகமான இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு இலங்கைக்கு வருகை தருபவர்களின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை செயற்பாடு ஒழுங்கான முறையில் செயற்படுத்தாததன் காரணத்தினால் இது மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

Leave a Reply