இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 34,973 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாடு பூராகவும் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 260 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,42,009 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய இதுவரைகாலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,23,42,299 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் நாடளாவிய ரீதியிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,90,646 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடகக்கத்து.

Leave a Reply